Breaking News

ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தென்மராட்சி ஆலயமொன்றில் திருடர்கள் கைவரிசை !

ஸ்ரீ.ரூபகானன்

தென்மராட்சி பகுதியின் கொடிகாமம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்கு சிவபூதவராயர் ஆலயத்தில் நேற்று இரவு ஊரடங்கு அமுலில் இருந்த வேளை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலய கூரையை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் ஆலய பாவனையில் இருந்த பல ஆயிரம் ரூபா பெறுமதியான குத்துவிளக்குகள் உள்ளடங்கலாக ஆலயத்தின் பிரதான கலசத்தினையும் திருடி சென்றுள்ளனர் .

திருட்டு சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.