“ஊரடங்குச் சட்டம் இருந்தாலும் தொண்டாவின் இறுதிக்கிரியை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்” – பிரதமர் தெரிவிப்பு
மே 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வுகளுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்றுமுன் தெரிவித்தார்.
31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது தொண்டாவின் இறுதிக்கிரியை நிகழ்வு நடத்துவதற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து கேட்டபோது “ தமிழன்” செய்திகளிடம் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது ,
இறுதிக்கிரியை நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதுவும் சுகாதார பாதுகாப்புடன் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறை செய்கிறது. தற்போதுள்ள நிலைமையில் பெருமளவில் மக்கள் கூட்டத்தை ஒரு இடத்தில் திரட்ட முடியாது.திரட்டவும் கூடாது. எனவே குடும்ப உறுப்பினர்கள் , முக்கிய பிரமுகர்கள் , மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. – என்றார் பிரதமர்