Breaking News

ஊரடங்கிலும் மூடப்படும் நகரங்கள் – பேருவளையிலும் ஒரு கிராமம் மூடப்பட்டது !

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கலென்பிந்துனுவெவ , ஹொரோவொப்பொத்தானை , கஹட்டகஸ்திகிலிய ஆகிய நகரங்கள் மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பேருவளை பன்னில கிராமம் இன்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாகொட வைத்தியசாலையில் இன்றிரவு சேர்க்கப்பட்டுள்ளார் .இவர் சுமார் 20 பொது இடங்களுக்கு கடந்த சில நாட்களாக பயணித்துள்ளதால் அந்த இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பள்ளிவாசல் ஒன்றில் பெருமளவானோர் கூடினார்கள் என்று போலித் தகவல்களை பரப்பிய இருவரை பொலிஸார் பேருவளையில் கைது செய்துள்ளனர்.