இலங்கை

ஊடக விருது விழாவில் பத்திரிகை ஆசிரியர்மார் வெளிநடப்பு விவகாரம் – வருத்தம் வெளியிட்டார் மைத்ரி !

ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வில் வெளிநடப்பு செய்த தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் வருத்தத்தை தெரிவித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வுக்கு சென்றிருந்த தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்மார் பெல்கனியில் அமருமாறு பணிக்கப்பட்டனர்.
இது தங்களை அவமதிக்கப்பட்ட செயலெனக் கூறி அந்த ஆசிரியர்மார் நிகழ்வில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஊடக அமைச்சர் ருவன் விஜயவர்தனவும் இதற்கு கவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரியும் தனிப்பட்ட ரீதியில் சில பத்திரிகை ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு தனது கவலையை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதற்கும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.