Breaking News

ஊடக இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஆலோசிக்கிறார் ருவன் !

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நேற்று கடுமையாக விமரிசித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிய ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன , தனது ஊடக இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஆலோசித்து வருகிறார்.

தனது ஆலோசனையின்றி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவந்தமை மற்றும் எந்த காரணங்களுமின்றி அதனை செய்தமை , ரூபவாஹினி தலைவர் பதவிக்கு தாம் நியமித்த ஒருவரை பதவியேற்கவிடாமல் செய்தமை உள்ளிட்ட காரணங்களால் அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

எவ்வாறாயினும் தனது வசமுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ருவன் இராஜினாமா செய்யமாட்டாரென சொல்லப்படுகிறது