உஷ்... இது இரகசியம் !

உஷ் – ரணில் பக்கம் தாவுகிறார் மஹிந்த !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பல கட்சித் தாவல்கள் இடம்பெறவுள்ளன. பல இரகசியப் பேச்சுக்களும் நடந்துவருகின்றன.

இதன்படி – ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.இதற்கான பேச்சுக்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது கடும் அதிருப்தி கொண்டுள்ள மஹிந்த சமரசிங்க எம் பி , அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளார்.

ஏற்கனவே களுத்துறை எம் பி அஜித் பெரேரா சஜித் ஆதரவாளராக மாறிவிட்டதால் மஹிந்தவை உள்ளீர்க்க தீர்மானித்துவிட்டாராம் ரணில் !