உஷ்... இது இரகசியம் !

உஷ் ..! – ரணிலுடன் மோதும் அமைச்சர் மத்துமபண்டார..

 

அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார பிரதமர் ரணிலுடன் கருத்து மோதல் கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில் மேலதிக அமைச்சுப் பொறுப்பான கிராமிய அபிவிருத்தி அமைச்சு – அமைச்சர் ரஞ்ஜித்துக்கு வழங்கப்பட்டது.

ஆனால் புதிதாக வெளிவந்த வர்த்தமானியில் – அந்த அமைச்சின் கீழ் வரும் பெரும்பாலான இலாகாக்கள் முந்தைய அமைச்சர் ஹரிசனின் கீழ் இருப்பதை அறிந்த அமைச்சர் ரஞ்ஜித் விசனமடைந்தார்.

உடனே பிரதமரின் செயலாளரை தொடர்புகொண்ட அமைச்சர் ரஞ்ஜித் ,இப்படியான நிலையில் அமைச்சுப் பதவியை தொடர்வதா என்பதுபற்றி யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரதமர் ரணிலிடமும் தனது கடும் அதிருப்தியை ரஞ்ஜித் வெளிப்படுத்தியுள்ளார் என சொல்லப்பட்டது.