உஷ்... இது இரகசியம் !

உஷ்….! மைத்ரியை புறக்கணித்த ரணில்..

 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எம் பியின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்றிரவு மவுண்ட் லவினியா ஹோட்டலில் நடந்தது.

ஜனாதிபதி – பிரதமர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி மைத்ரியுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் இருந்த மேசையில் பிரதமர் ரணில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி மைத்ரி அந்த மேசைக்கு அருகில் வந்த கையோடு பிரதமர் வேறு மேசைக்கு சென்றதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் பிரதமர் தரப்பை ஜனாதிபதி கடுமையாக விமரிசித்து வந்த நிலையில் பிரதமர் இவ்வாறு ஜனாதிபதியை புறக்கணித்துள்ளார்.