உஷ்... இது இரகசியம் !

உஷ்..- மாலிங்கவால் பெரும் சர்ச்சை !

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடச் சென்ற லசித் மாலிங்க தனது மாமியார் மரணமடைந்ததையடுத்து அதில் கலந்து கொள்ள கொழும்பு வந்திருந்தார்..

பின்னர் லண்டன் திரும்பி போட்டிகளில் விளையாடினார்.

அதுவல்ல பிரச்சினை. மாமியாருக்கு தானம் வழங்கும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள அவர் மீண்டும் இலங்கை வருகிறாராம்.

கிரிக்கெட் ரீம் இக்கட்டான நிலையில் இருக்கும்போது பயிற்சிகளை மேற்கொள்ளாமல் 24 மணி நேரத்திற்குள் இப்படி இவர் செய்வது சரிதானா என்று உள்ளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

அதை பேசப்போய் அதனால் சர்ச்சைகள் ஏற்பட்டால் இந்த நிலைமையில் நல்லதல்லவென அமைதி காத்து வருகிறதாம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் .