உஷ்... இது இரகசியம் !

உஷ் … – பதில் அமைச்சர்கள் கெபினெட் வரத் தடை !

 

ஜனாதிபதியினால் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ளத் தேவையில்லையென தடை விதித்துள்ளார் பிரதமர் ரணில்.

ரிசார்ட் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன , அனோமா கமகே , லக்கி ஜெயவர்தன ஆகியோருக்கே இப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

“ நான் அனுப்பிய பெயர்களையே ஜனாதிபதி பரிசீலிக்கவில்லை. இந்த நிலையில் பதில் அமைச்சராக அவர் சிலரை நியமித்தால் என்ன செய்வது ?அவர்கள் அமைச்சரவை கூட்டத்தில் வந்து கலந்து கொள்வதில் அர்த்தமில்லை..” என்றாராம் ரணில்..

ரணிலின் இந்த தடை விடயம் ஜனாதிபதியின் காதுகளுக்கும் சென்றுள்ளதாம்.