உஷ்... இது இரகசியம் !

உஷ்… – தேசிய தொலைக்காட்சியில் பாடப் போகும் மைத்ரி !

 

தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் பிரதி ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். ‘சிஹினயக்கி ரே ‘ – கனவு இரவு என்று அர்த்தப்படும் இந்த நிகழ்வு ஞாயிறு தோறும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகிறது.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு நாளை நடக்கிறது.அடுத்த ஞாயிறு இது ஒளிபரப்பாகும்.நிகழ்வில் கலந்துகொண்டு பிரபலமான பாடல்களை தெரிவு செய்யவுள்ள ஜனாதிபதி சில பாடல்களை தாமும் பாடவுள்ளார் .