உஷ்... இது இரகசியம் !

உஷ்…..! – திருமணத்திற்கு திகதி குறித்தார் நாமல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் திருமணம் செப்டெம்பர் 17 ஆம் திகதி மவுண்ட் லெவினியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வி லிமினியை கரம்பிடிக்கிறார் நாமல்.

தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் இலங்கை வந்தபோது அழைப்பு விடுத்திருந்த நாமல் திருமண அழைப்பிதழையும் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளார் என அறியமுடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினமும் அன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.