உஷ்... இது இரகசியம் !

உஷ் ..! – தாக்குதல் நடத்தப்படுமென வந்த தொலைபேசி அழைப்பு..

நேற்றுக் காலை பொலிஸ் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு அழைப்பு வந்தது.

“ நான் டீ ஐ ஜி ( பெயரைக் கூறுகிறார் )பேசுகிறேன். சில இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. உடனடியாக தேடுங்கள்.” என்று அந்த அழைப்பில் கூறப்பட்டது.

நேற்று தேவாலயங்கள் முழுதும் மக்கள் கூட்டம் இருந்ததால் டென்சன் ஆகிய அவசர பொலிஸ் இதனை தேட ஆரம்பித்தது.

சரி.. மேலதிக தகவல்களை பெறுவோம் என்று சம்பந்தப்பட்ட டீ ஐ ஜியை பொலிஸார் தொடர்பு கொண்டபோது , அப்படியொரு அழைப்பை மேற்கொள்ளவில்லையென அவர் தெரிவித்தாராம்..

இப்போது டீ ஐ ஜி பெயரில் அழைப்பை மேற்கொண்டவர் யார் எனத் தேடுகிறது பொலிஸ்..