உஷ்... இது இரகசியம் !

உஷ்…- சந்திரிகாவும் மஹிந்தவும் சிரித்தபடி பேசிக்கொண்ட விடயம் இதுதான்…!

 

முன்னாள் ஜனாதிபதிமார்களான சந்திரிகா மற்றும் மஹிந்த ஆகிய இருவரும் கொழும்பில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு ஒன்றில் சந்தித்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த படங்கள் வெளியாகியிருந்தன…

அந்த நிகழ்வில் மஹிந்தவை கண்ட சந்திரிகா “ ஆ.. மஹிந்த கோஹோமத ?” என்றாராம்…

“ஹொந்தை ஹொந்தை.. ஒபதுமிய கோஹோமத..?” ( நல்ல சுகம் நீங்கள் எப்படி ?) என்று பதில் சொன்னாராம் மஹிந்த..

இப்படி சில விடயங்களை பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மஹிந்தவின் முகத்தை பார்த்த சந்திரிகா.. “ நான் இப்படி உங்களுடன் பேசுவதை பார்த்து நானும் தாமரைமொட்டுடன் இணைந்துவிட்டேன் என்று கூறிவிடப் போகிறார்கள்..” என்று சத்தமாக சிரித்தபடி சொன்னாராம்..

“ அதற்கென்ன நீங்கள் இணையுங்கள் நல்லது தானே… நாங்கள் உங்களின் எதிரிகள் அல்லவே..”என்று அதற்கு சிரித்தபடி பதில் சொன்னாராம் மஹிந்த..

இதுதான் அந்த படத்தின் பின்னணி தகவல்…

இதே நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரியுடன் சந்திரிகா எதுவும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை..