உஷ்... இது இரகசியம் !

உஷ்… – சஜித் மீது கடுப்பாகிய சீனியர்ஸ் !

 

அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான அணியில் இருக்கும் சில சீனியர்ஸ் இன்று அவருடன் கடுப்பில் இருக்கிறார்களாம்.

அரசியல் கூட்டணி அமைக்க முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை வெளியிடக் கோரி அவர் விடுத்த அறிக்கை தான் அதற்கான காரணமாம்..

ஏற்கனவே நடந்த பேச்சுக்களில் கூட்டணி அமையட்டும்… பின்னர் வேட்பாளரை தெரிவு செய்வோம் என்று இணங்கிய சஜித் இப்போது யாரின் அழுத்தத்தில் இப்படி அறிக்கை விட்டார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்…

இப்படியான பின்னணியில்- அவசரப்பட்டு விட்டோமோ என்று தனக்கு வேண்டப்பட்ட ஒருவரிடம் புலம்பினாராம் சஜித்துக்கு ஆதரவான சீனியர் ஒருவர் ..!