உஷ்... இது இரகசியம் !

உஷ் ..- கோட்டா – சஜித் திடீர் சந்திப்பு !

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நேரடியாக சந்தித்துக் கொண்டனர்.

முன்னாள் எம் பி ரிரான் அலசின் மகனது திருமண நிகழ்வு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடந்தது. ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் அதில் கலந்து கொண்டனர்.

ரிரான் அலஸ் மவ்பிம – சிலோன் ருடே பத்திரிகை நிறுவன ஸ்தாபகர்.. புகழ்பூத்த டி எஸ் சேனநாயக்க கல்லூரி முன்னாள் அதிபர் அலஸின் மகன் .

எனவே முக்கியமான வீ ஐ பி க்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கோட்டாவை கண்டு சஜித் வாழ்த்தை தெரிவித்து பேசத் தொடங்கினார் . இருவரும் பலதும் பத்தையும் பேசியதாக தகவல்.

இந்த திருமண நிகழ்வுக்கு முன்னர் பொதுமேடை ஒன்றில் கோட்டாவை மறைமுகமாக தாக்கிப் பேசியிருந்த சஜித் அதனை சரி செய்யும் வகையில் இங்கு உரையாடி நட்பு பாராட்டினாராம்.