உஷ்... இது இரகசியம் !

உஷ்… ! – கொட்டகலையில் யாக பூஜை நடத்துகிறது இ.தொ.கா !

 

நாளை முதல் ஒருவார காலத்திற்கு விசேட யாகபூஜைகளை கொட்டகலை தொண்டமான் நிலையத்தில் நடத்துகிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

கட்சி நிர்வாகிகள் நாளை முதல் அங்கு பூஜைகளில் கலந்து கொள்ள செல்லும் அதேசமயம் இந்தியாவின் ஆந்திராவிலிருந்து பூசகர் ஒருவர் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

காங்கிரஸ் தலைவருக்கு அரசின் உயர்பதவி கிடைக்கவேண்டியும் ஜனாதிபதி மைத்ரிக்கு அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டியும் இந்த யாகம் நடத்தப்படுவதாகவும் – இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற பின்னர் கட்சித் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரசின் இளவயது நிர்வாகி ஒருவர் தனது சகாக்களிடம் கருத்து பகிர்ந்துள்ளார்.

இதே பூசகர் இ.தொ.கா ஏற்பாட்டில் – கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற விசேட யாக பூஜைகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.