உஷ்... இது இரகசியம் !

உஷ் …! “எப்போ அமைச்சுக்களை எடுப்பீர்கள்” – கேட்டார் மைத்ரி..

 

நேற்றிரவு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தனர் அல்லவா…

அந்த பேச்சு நடைபெற்ற ஜனாதிபதியின் பெஜெட் வீதி இல்லத்திற்கு சென்று பேச்சு நடைபெற்ற அறைக்குள் செல்லும்போதே ஜனாதிபதி சிரித்தபடி… “ஆ… எப்போது அமைச்சுப் பொறுப்புக்களை எடுக்கப் போகிறீர்கள்…?” என ரிஷார்ட் மற்றும் ஹக்கீமை பார்த்து கேட்டாராம்.

இந்தக் கேள்விக்கு எந்த பதிலையும் இவர்கள் சொல்லவில்லையாம்.“ இப்போ பிரச்சினை இல்லைதானே.. அமைச்சுப் பொறுப்புக்களை பாரமெடுங்கள்..” என்று கூறியபடி இதர விடயங்களை பேசத் தொடங்கினாராம் மைத்ரி..