இலங்கை

உஷ் இது ரகசியம் !

* தனது வாழ்க்கை வரலாறை நூலாக வெளியிடத் தயாராகிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் அதனை எழுதுகிறார்.

* தனது இல்லத் திருமண நிகழ்வுக்கு மஹிந்தவை வீட்டுக்கே சென்று அழைத்தார் விஜித் விஜிதமுனி சொய்சா எம் பி.

* தமிழ்நாடு , புதுக்கோட்டை திருப்பத்தூரில் நடைபெறும் ஊர்த் திருவிழாவில் கலந்து கொள்ள இவ்வாரம் செல்லும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 15 ஆம் திகதி .அங்கிருந்து திருப்பதிக்கு சென்று அமைச்சர் ராஜிதவின் திருப்பதி பயணத்தில் இணைந்து கொள்வார்.

* மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கட்சிக்குள் சலசலப்பு.

* ஜனாதிபதிக்கெதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரவேண்டுமென கூறி ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை எம் பிக்கள் நடத்திய இரகசிய சந்திப்பு குறித்து பேச்சில் கலந்து கொண்ட எம் பி ஒருவரே ஜனாதிபதியின் காதுகளில் ஓதினாராம்.

* அமைச்சர் ஒருவரின் அந்தரங்க விடியோ வெளிவந்தமை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மறுப்பு வெளியிட்டாலும் அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தியோகபூர்வ முறைப்பாடு எதனையும் செய்யவில்லையாம்.

* தனது இல்லத்தில் வளரும் லப்ரொடர் நாய்க்கு பிறந்த 4 நாய்க்குட்டிகளை பொலிஸ் மோப்ப நாய் பிரிவிற்கு அன்பளிப்பு செய்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித்த