உஷ்... இது இரகசியம் !

உஷ் … இது ரகசியம்

இந்து மதகுருவை தேடிய டக்ளஸ் – சமாளித்த மைத்ரி !

 

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்தில் மதத் தலைவர்கள் சிலரும் வந்திருந்தனர்.

ஆனால் இந்து மத குருவை காணாதபடியால் ஜனாதிபதியிடம் அதுபற்றி கேட்டாராம் டக்ளஸ் எம் பி.

உடனே பதறிய ஜனாதிபதி அருகில் இருந்த செயலரை அழைத்து விளக்கம் கேட்டு உடனே பதில் வழங்கினாராம்.. “ வருந்துகிறேன் டக்ளஸ் எம்பி.. நாங்கள் ஒருவரை ஒழுங்குபண்ணியிருந்தோம்.. ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போயுள்ளது.. அடுத்தமுறை இப்படி நடக்காது” என்று சொன்னாராம் மைத்ரி.

நேற்றைய இந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சி எம் பிக்கள் அனைவரும் பகிஷ்கரித்திருந்தமை ஒரு கொசுறுத் தகவல் !