இலங்கை

உஷ் இது இரகசியம் !

* ரூபவாஹினி கூட்டுத்தாபன புதிய தலைவர் நியமனத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அமைச்சரவையில் நேற்று பேசவிருந்தாராம் பிரதமர்.ஆனால் அங்கு அந்த விடயம் பேசப்படாததால் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் பேச தீர்மானித்தார் ரணில்.அதன்படி கூட்டம் முடிந்த பின்னர் ஜனாதிபதியின் அறைக்கு பிரதமரும் அமைச்சர் கபீர் ஹஷிமும் சென்றனர். அப்படிச் சென்றபோது அந்த அறைக்குள் ஜனாதிபதியுடன் அளவளாவிக் கொண்டிருந்தாராம் அமைச்சர் சஜித் பிரேமதாச.

இதனை கண்டு அதிர்ச்சியுற்ற பிரதமர் ரணில் -அதனை காட்டிக்கொள்ளாமல் ரூபவாஹினி விடயத்தினை பற்றி பேசியதாக தகவல். இந்த விடயத்தை தான் கையாள்வதாக ஜனாதிபதி அதன்போது தெரிவித்துள்ளார். பிரதமர் பேசி முடிந்து திரும்பும்வரை சஜித் ஆசனத்தில் இருந்து எழும்பவில்லையாம்.

இது ஒருபுறமிருக்க அமைச்சர் மலிக்குடன் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல்.

* இன்று நள்ளிரவுடன் தென் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைகிறது.அடுத்த தேர்தல் வரை இயங்கவேண்டுமென்பதால் ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அரசின் வேறு உயர்பதவிகளை பெற முயற்சிகளை எடுப்பதாக தகவல்.

* 33 அரசியல்வாதிகள் புதுவருட விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.எரான் விக்ரமரத்ன ,ரவூப் ஹக்கீம் ,துஷார இந்துனில் ,சுஜீவ சேனசிங்க ,ஜே .சி.அலவத்துவள ,அகிலவிராஜ் காரியவசம் ,உதய கம்மன்பில ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர்.இவர்களில் சிலர் அங்கு சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் தனிப்பட்ட ஓய்வுக்காக செல்லவுள்ளனர்.சபாநாயகர் கரு ஜெயசூரியவும் இப்போது மாநாடு ஒன்றுக்காக கட்டார் சென்றுள்ளார். ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் ஜப்பான் செல்லவுள்ளார்.

* வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடக்க முன்னர் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம் .பி யின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.சிலசமயம் அவர் ரணிலுக்கு ஆதரவை வழங்கி விடுவார் என்ற காரணத்தினால் இப்படி நடந்ததாக தகவல் .நேற்று மீண்டும் அவருக்குரிய பாதுகாப்பு வழங்கப்பது.

* தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை நாடு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ச .21 ஆம் திகதி தெஹிவளை மற்றும் பண்டாரகமவில் நடக்கும் தனது அமைப்பின் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்கிறார் .