உஷ்... இது இரகசியம் !

உஷ். இது இரகசியம்

* மனோவுடன் விமானத்தில் அரசியல் பேசிய மைத்ரி !

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு இந்தியாவில் இருந்து நேற்றிரவு நாடுதிரும்பினார் மைத்ரி..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ எல் 196 விமானத்தில் புதுடில்லியில் இருந்து வரும்போது ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் மனோ கணேசனிடம் நாட்டு நடப்புக்களை பேசத் தொடங்கிய ஜனாதிபதி – ரத்தன தேரரின் உண்ணாவிரதம் குறித்தும் கரிசனையுடன் பேசினாரென தகவல் .

* கோட்டாவின் பாதுகாப்பு அதிகரிப்பு !

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாயவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் குறைக்குமாறு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுள்ளனர் .

இதனால் எதிர்வரும் நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது அமைப்பின் பல நிகழ்வுகளை ரத்துச் செய்துள்ளார் கோட்டா .