உஷ்... இது இரகசியம் !

உஷ்… இது இரகசியம்..!

 

ரணில் – தம்மிக்க பெரேரா சந்திப்பு

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவுக்கும் பிரதமர் ரணிலுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இவ்வார முற்பகுதியில் நடந்தது.

பிரதமருக்கு பகல் விருந்து தம்மிக்கவின் வீட்டில் நடந்தது. அமைச்சர் சாகலவும் கலந்து கொண்டார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விவகாரம் குறித்து இங்கு பேசப்பட்டதாம்.

பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்கவை நிறுத்துவது குறித்து இங்கு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த மேட்டர் சஜித்தின் காதுகளுக்கு சென்றதால் இப்போ தனது ரீமை உஷார்படுத்தி வருகிறார் .

சம்பிக்கவின் விருந்து !

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு விருந்துபசாரம் ஒன்று நடந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து இங்கு பேசப்பட்டதாம்