உஷ்... இது இரகசியம் !

உஷ்..! – அவர் ஒரு பிரபல தமிழ் வர்த்தகர்…

 

“திரு” என்று ஆரம்பிக்கும் பெயரைக் கொண்ட அந்த வர்த்தகர் பிரதமர் ரணிலை சந்தித்து சபாநாயகர் கரு ஜெயசூரியவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த திட்டம் இருக்கிறதா என்று நாடி பிடித்து பார்த்தாராம்…

அதற்கு ரணில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தாத அதேசமயம் தாம் போட்டியிட உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ சபாநாயகர் கரு ஜனாதிபதி தேர்தலில் இறங்க உத்தேசித்து போட்டோ ஷூட் கூட நடாத்தியுள்ளாராம்.. சோதிடம் பார்த்ததில் நேர காலமும் அவருக்கு நன்றாக உள்ளதாம்…

இப்படியான பின்னணியில் நாளை ஐ.தே.க செயற்குழு கூட்டம் அனல் பறக்கும் என்கின்றன உள்ளக தகவல்கள்..