விளையாட்டு

‘உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ ட்ராவிட்

 

இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளின்போது, உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர்களாக வெளிநாட்டவர்கள் நியமிக்கப்பட்டாலும், உதவிப் பயிற்சியாளர்களhக இந்தியர்களை நியமிக்க முடியுமெனவும் எனினும், அவ்வாறு வாய்ப்புகள் வழங்கப்படாத பல திறமையாளர்கள் இந்தியாவில் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

‘இந்தியாவில் நிறைய திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர், அவர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் எப்படி திறமைசாலிகளோ, அதேபோல், அதேபோல் பயிற்சியாளர்கள் தரப்பிலும் நல்ல திறமைசாலிகள் காணப்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் பிறிமியர் லீக் தொடர்களில், அணிகளpன் உதவிப் பயிற்சியாளர்களாக இந்திய பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு உள்நாட்டு வீரர்கள் பற்றிய விபரங்கள் அதிகம் தெரியுமெனவும், மைதானங்கள் பற்றிய அறிவும் அவர்களுக்கு அதிகம் எனவும், ஆகவே அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.