விளையாட்டு

உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு டுமினி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஓல்-ரவுண்டர் டுமினி, இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கிண்ண போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக கிண்ணத்துக்கு பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடப் போவதாக 34 வயதான டுமினி நேற்று தெரிவித்தார்.

தோள்பட்டை காயத்துக்கு சிகிச்சை செய்த டுமினி 4½ மாத கால ஓய்வுக்கு பிறகு சமீபத்தில் தான் அணிக்கு திரும்பினார். இலங்கைக்கு எதிராக கேப்டவுனில் இன்று நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் களம் இறங்க இருக்கிறார். டுமினி இதுவரை 193 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5,047 ரன்களும், 68 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.