விளையாட்டு

உலக கிண்ண தொடரில் டேல் ஸ்டெயின் இல்லை

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவரது தோளில் இரண்டாவது முறையாகவும் காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.சி.சி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையும் பதிலளிக்காத நிலையில் அவரை அணியில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பேரன் ஹென்றிக் இணைக்கப்படவுள்ளார்.