விளையாட்டு

உலக கிண்ணத் தொடர் பங்குபற்றுதலை உறுதி செய்தார் மார்க் வுட்

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், தமது உடற்தகுதியை உறுதி செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது அவர் காயமடைந்தார்.
அவரது பாதம் ஸ்கேன் செய்யப்பட்டப் போது, அவருக்கு காயம் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்தநிலையில் அவர் உலகக்கிண்ண தொடருக்கான இங்கிலாந்து குழாமில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீசக்கூடிய இரண்டு பேரில் மார்க் வுட் ஒருவராவார்.
மற்றையவர் ஜோப்ரா ஆர்ச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.