விளையாட்டு

உலக கிண்ணத்தை வெல்லக்கூடிய பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் – ட்ராவிட் நம்பிக்கை.

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் அதிகம் துடுப்பாட்ட வீரர்களுக்கே சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள் அதிகபடியான ஓட்டங்களைக் குவிக்கும் உலகக்கிண்ணத் தொடராக இது அமையவுள்ளது.

எனினும் போட்டிகளுக்கு இடையில் விக்கட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

அவ்வகையான வந்துவீச்சாளர்கள் இந்திய கிரிக்கட் அணியின் இடம்பிடித்துள்ளனர் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், ஏ அணியின் பயிற்றுவிப்பாளருமான ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.