விளையாட்டு

உலகின் அதிவேக மனிதருக்கு கொரோனா உறுதி

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவரும் உலகின் அதிவேக மனிதர் என்று பெயர் பெற்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் கடந்த 21ஆம் திகதி தனது 34ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள காணொலி பதிவில், தனக்கு அறிகுறியற்ற நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்தால் உலக முழுவதும் இரசிகர்களை கவர்ந்தவர்.

100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசைன் போல்ட், 14 உலக சம்பியன் பதக்கங்களையும் 8 ஒலிம்பிக் பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.