விளையாட்டு

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார் தவான் !

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உலகக்கிண்ணத் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ஏற்கனவே அவர் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில் அவரது காயம் பாரதூரமானது என்றும் அவர் குணமடைவதற்கு மேலும் காலம் தேவை என்பதாலும் அவருக்கு எஞ்சியுள்ள போட்டிகளிலும் ஓய்வு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக ஏற்கனவே அணியில் சேர்க்கப்பட்டிருந்த ரிசாப் பாண்ட் அணியில் தொடர்ந்தும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது