இலங்கை

உலகக் கிண்ண அழகுக் கலை போட்டியில் இலங்கைக்கு முதலிடம்

சர்வதேச அழகுக் கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை இலங்கை தனதாக்கிக் கொண்டது.
பிரான்ஸ் -பாரிஸில் நேற்று நடைபெற்ற சர்வதேச அழகுக் கலை முக ஒப்பனை போட்டியிலேயே இலங்கை இந்த கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று போட்டியாளர்கள், இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.
கயல்விழி, மயூரி மற்றும் தீக்ஸினி ஆகியோரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.
மூன்று போட்டியாளர்களில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.
கொழும்பைச் சேர்ந்த அலகு கலை நிபுணரான கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் யுவதியாவர்.
மாத்தறையைச் சேர்ந்த மயூரி மற்றும் காலியைச் சேர்ந்த தீக்ஸினி ஆகியோரும் இந்த போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஓ.எம்.சி சிகை அலங்கார உலகக் கிண்ணம் 2019  பாரிஸில் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த போட்டிக்காக சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.