விளையாட்டு

உலகக்கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறினார் ஷோன் மார்ஸ்

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஸ் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

பயிற்சியின் போது அவர் காயமுற்றதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக பீற்றர் ஹெண்ட்ஸ்கொம்ப் இணைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய A அணிக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று முதல் உலகக் கிண்ணத் தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

அதேநேரம் பயிற்சியின் போது க்ளென் மெக்ஸ்வெல்லும் காயமடைந்த போதும் அவரது உபாதை பாரதூரமானது இல்லை என அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.