விளையாட்டு

உலகக்கிண்ணத்தை வெல்லாத 2 அணிகள் இறுதிப் போட்டியில்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வென்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இதன்படி நியூசிலாந்து அணிக்கெதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரையில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இல்லை.