விளையாட்டு

உலகக்கிண்ணத்தை வென்றது நியுசிலாந்து

 

லிவர்பூலில் நடைபெற்ற 2019 நெட்போல் உலகக் கிண்ணத்தை வென்று நியூசிலாந்து திகைப்பூட்டியுள்ளது.

11 முறை கிண்ணத்தை வென்ற நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து, நியுசிலாந்து 52-51 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

இது நியுசிலாந்து வெல்லும் ஐந்தாவது உலக கிண்ணமாகும்.

ஆனால் 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் பெறும் முதலாவது கிண்ணமுமாகும்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இங்கிலாந்து 58-42 என்ற கோல் கணக்கில் வெண்கலம் வென்றமை குறிப்பிடத்தக்கது.