உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு – கோட்டாபய உறுதி
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு நிறுவப்படவேண்டுமென்ற பேராயரின் வேண்டுகோள் தமது ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்படுமென ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாடாக இலங்கையை பாதுகாப்பது தமது பொறுப்பென்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.m