Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அடுத்தவாரம் முக்கியமான தகவல்கள் வெளியாகலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு கொண்டமைக்காக சவுதியில் கைது செய்;யப்பட்டு நாடுகடத்தப்பட்ட ஐந்து பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களின் தொடர்பாடல் சாதனங்களும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் முக்கியமான பல விடயங்கள் அடுத்த வாரம் வெளியாக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக, விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளது தலைமையுடன் அல்லது தலைமையுடன் நேரடி தொடர்பில் இருந்த தரப்புடன் தொடர்பில் இருந்த இலங்கையர் யார்? என்ற விபரங்கள் குறித்து தற்போது துப்பு துலக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.