Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – விசேட குழுவொன்றை அமைத்தார் ரணில் !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் பிரதமர் ரணில்.

சட்ட மா அதிபர் திணைக்களம் ,பொலிஸ் திணைக்களம் , நீதியமைச்சின் அதிகாரிகளை கொண்ட இந்தக் குழு அடிக்கடி கூடி ஆராய்ந்து விசாரணைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும்.

பிரதமர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டமைச்சர் திலக் மாறப்பன , நீதியமைச்சர் தலதா அத்துகோரள ,பதில் பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.