இலங்கை

உயிரிழப்பு 207 ஐ எட்டியது – ஏழு பேர் கைது – அவசர அமைச்சரவை கூடியது

 

இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 வரை அதிகரித்துள்ளது.காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை தாக்குதல்கள் கூடுதல் அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஒரே குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் சொல்கின்றனர்.

பிரதமர் ரணில் விசேட அமைச்சரவை ஒன்றை கூட்டியுள்ளார்.

சுமார் 30 வெளிநாட்டுப் பிரஜைகள் பலியென சொல்லப்டுகிறது. ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதல் சி சி ரி வி யை புலனாய்வு செய்ததில் இரண்டு பேர் சுமார் 25 கிலோ எடையுள்ள பொருளை தூக்கி வருவது தெரியவந்துள்ளது.

தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரில் இருந்து சின்னமன் கிராண்ட் ஹோட்டலின் குடிநீர் போத்தல் ஒன்று இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் விரைவில்….