Breaking News

உயிரிழப்பு அதிகரிப்பதால் அமெரிக்காவில் புதைக்கப்படும் உடல்கள் !

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நியூயோர்க்கின் ஒரு மயானத்தில் சவப்பெட்டிகள் புதைக்கப்படும் படங்கள் வெளிவந்துள்ளன.

உறவினர்கள் இல்லாத உயிரிழந்த நபர்கள் அல்லது இறுதி சடங்கை நடத்த முடியாத குடும்பங்களுக்காக இந்த ஹார்ட் தீவிலுள்ள மயானம் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு நாட்டையும் விட அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் நியூயோர்க்கில் பதிவாகியுள்ளனர் .

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 16 லட்சத்து 52 ஆயிரத்து 652 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் ஒரு லட்சத்து 371 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டு 17 ஆயிரத்து 927 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 53 பேர் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 577 பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 849 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 607 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டு 12 ஆயிரத்து 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 7 ஆயிரத்து 347 பேர் பாதிக்கப்பட்டு 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 69 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.