விளையாட்டு

உயரிய பதவியின் கடமைகளை பொறுப்பேற்கின்றார் சங்கக்காரமெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (எம்சிசி) தலைவராக, இலங்கை அணியின் முன்னாள்  நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கின்றார்.

இதன் மூலம், கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக பதியேற்கும், முதல் பிரித்தானியர் அல்லாத பிரஜையாக சங்கக்கார பதிவாகியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மெரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது.

அத்தோடு, சங்கக்கார  இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்து வருகின்றார்.

இன்றைய தினம் பதவியேற்கும் சங்கக்கார, 2020ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை, அதன் தலைவராக கடமையாற்றவுள்ளார்.

லண்டனின் லோர்ட்ஸpல் 1787ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெரில்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினுடைய விதிமுறைகளை முதல் தடவையாக உருவாக்கியதோடு, இந்த கழகம் உருவாக்கிய கிரிக்கெட் விதிமுறைகளையே சர்வதேச கிரிக்கெட் பேரவை பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.