இலங்கை

“ உத்தியோகபூர்வ அலுவலுக்காக ஓமான் வந்தேன் ” – அமைச்சர் றிஷார்த் தொலைபேசியில் தகவல் !

 

“ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன். ஓரிரு நாளில் திரும்பிவிடுவேன்” இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் றிஷார்த் பதியுதீன்.

அமைச்சர் றிஷார்த் பதியுதீன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அவை தொடர்பில் அவரிடமே நேரடியாக கேட்டது தமிழன் செய்தி இணையம். அவர் மேலும் கூறியதாவது ,

“ உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன் . யாரிடம் அறிவிக்க வேண்டுமோ அவர்களிடம் அறிவித்துவிட்டே வந்தேன்.ஓரிரு நாட்களில் நாடு திரும்பி விடுவேன்..”

என்றார் அமைச்சர்.

நீங்கள் வெளிநாடு சென்றது பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் என்று சொன்னபோது ,
“ பேசுகிறவர்கள் பேசட்டும்..” என்று பதிலளித்தார் அமைச்சர் .

( கோப்புப் படம் இணைப்பு )