இலங்கை

உணவு ஒவ்வாமையால் மஸ்கெலியாவில் 42 பேர் பாதிப்பு

மஸ்கெலியா லக்சபான தோட்டத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார்  பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 7 பேர் சிறுவர்களாவர்.

லக்சபான தோட்ட கோவில் திருவிழாவின் எட்டாம் நாள் திருவிழா நேற்று நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின் ஏற்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டோர் சிகிச்சைகளின் பின்னர் இன்று மாலை வீடு திரும்பலாமென எமது நோர்ட்டன் ப்ரிட்ஜ் செய்தியாளர் தெரிவித்தார் .

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்