இலங்கை

ஈஸ்ரர் தாக்குதல்களை விசாரிக்கும் தெரிவுக்குழுவில் இன்றுமுதல் பாதுகாப்பு அதிகாரிகள் – ஊடகங்களுக்கு அனுமதியில்லை !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

அரச புலனாய்வுத்துறை தலைவர் – டீ ஐ ஜி நிலந்த ஜயவர்தன , பயங்கரவாத விசாரணைப் பிரிவு பணிப்பாளர் வருண ஜயசுந்தர , குற்றப் புலனாய்வு திணைக்கள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன , சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகர, ரி.ஐ. டி இன்ஸ்பெக்டர் தரங்க பத்திரன ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை , ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , பிரதமர் ரணில் ஆகியோரிடமும் தெரிவுக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.