இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை தகவல்

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவர்கள் மூவரும் இலங்கையில் தாக்குதுலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அறியக் கிடைத்துள்ளதாக அந்நாட்டு நீதிமன்றத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாகவும் பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் நௌபர், குண்டுகளைத் தயாரிக்க உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள  மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், தாக்குதலில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மொஹமட் மில்ஹான் ஹய்யது மொஹமட் ஆகிய மூவர் மீதே அமெரிக்க நீதித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து அமெரிக்கர்களும் உள்ளடங்குவர்.