உலகம்

ஈரான் தொடர்பில் புட்டின் – ட்ரம்ப் பேச்சு

ஜப்பானில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் அங்கு செல்கின்றனர்.

அங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற உள்ளது.

இதன்போது ஈரான் தொடர்பிலும் அணு ஆயுத கட்டுப்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என ரஷ்யாவின் அரசாங்கம் அறிவித்துள்ளது

குறிப்பாக ஈரானுக்கு அமெரிக்கா அண்மையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில் அது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.