உலகம்

ஈரானுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தலைவர்

ஈரானின் சமீபத்திய ‘2015 அணுசக்தி ஒப்பந்த’ மீறல்கள் பாரதூரமானவை அல்ல என்றும் அதை மாற்றியமைக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் கூறுகிறார்.
‘ஈரானின் நடவடிக்கைகளை மாற்றியமைத்து முழு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுப்பதாக’ பெடெரிகா மொகெரினி தெரிவித்துள்ளார்.
ஈரான் மே மாதத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை அதிகரித்துள்ளது.
ஈரான் – வல்லரசு நாடுகளின் ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா விலகியதிலிருந்து அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக ஈரான் அணு செறிவாக்கலை மேலோங்கச்செய்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
பொருளாதாரத் தடைகளை மீறி சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பலை இந்த மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து கைப்பற்றியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து – ஈரானுக்கு இடையிலும் பதட்டம் நிலவுகிறது.
இந்தநிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.