உலகம்

ஈரானில் நிலநடுக்கம்; ஐந்து பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

வடமேற்கு ஈரானில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் நேற்றிரவு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஈரானின் நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவர்கள் சனநெரிசலில் சிக்கியே காயமடைந்ததாக அந்நாட்டு அரசச தொலைக்காட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இரண்டு பெரிய ‘டெக்டோனிக்’ தகடுகளில் அமைந்துள்ளமையினால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது.

2003ஆம் ஆண்டில், 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டின் தென்கிழக்கில் உள்ள வரலாற்று நகரமான பாம் நகரை அழித்ததோடு, 26,000 பேர் கொல்லப்பட்டனர்.

2017இல், ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 600 பேர் கொல்லப்பட்டதோடு, 9,000ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்