உலகம்

ஈராக் பிரதமர் பதவி விலகினார்

 

ஈராக் பிரதமரின் பதவி விலகலை ஈராக்கிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஈராக்கில் அரசhங்கத்திற்கு எதிரhன போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்தப்போராட்டத்தில் 400ற்கும் அதிகமானவர்கள் பலியாகியதையடுத்து ஈராக்கின் ஷியா மதகுருமார்கள் பிரதமர் மஹ்தி பதவிவிலக வேண்டுமென கடுமையாக வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து  ஈராக்கிய பிரதமர் கடந்த வாரம் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் அப்துல் மஹ்தியின் பதவி விலகலை ஈராக்கிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.