உலகம்

‘ஈராக்கிலிருந்து வெளியேறப்போவது இல்லை’  – அமெரிக்க ஜனாதிபதிஅமெரிக்க துருப்புகளை ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் பிரேரணை நிறைவேற்றியுள்ள நிலையில், ஈராக்கிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார்.

“நாங்கள் மிகவும் அசாதாரணமான விலையுயர்ந்த விமானத் தளத்தை அங்கே அமைத்து வருகின்றோம். இதைக் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும். அதனை அவர்கள் எங்களுக்குத் திருப்பிச் செலுத்தாவிட்டால் நாங்கள் வெளியேற மாட்டோம்” என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாக்தாத்தில்இ ஈரானிய இராணுவத்தளபதி ஜெனரல் குவாசிம் சுலைமானியை அமெரிக்கா  படுகொலை செய்த பின்னர் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படுகொலைக்கு பதிலாக அமெரிக்கா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என ஈரான் கடுமையான’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

62 வயதான சுலைமானி, மத்திய கிழக்கில் ஈரானிய இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்இ எனினும் அமெரிக்காவால் அவர் ஒரு தீவிரவாதியாக கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.